Master of Tamil

தமிழில் முதுமாணி

அணி XI – புதிய அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கற்கைநெறி விவரம்

கற்கைநெறிக் காலம்ஒரு வருடம்
மொழி மூலம்தமிழ்
தெரிவுமுறைமைநேர்முகத்தேர்வு
கற்கைநெறிக் கட்டணம்ரூ. 195,000/-ரூ. 5,000/- மீள அளிக்கப்படும்
விண்ணப்பப் படிவக் கட்டணம்ரூ. 1,000/-
📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 நவம்பர் 30 (30/11/2026)

அனுமதிக்குரிய தகைமைகள்

(அ) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் ஏதாவது ஒரு கற்கைநெறியில் பட்டம்
அல்லது
(ஆ) பல்கலைக்கழக மூதவையால் ஏற்கப்படக்கூடிய வேறு தகைமைகளும் அனுபவமும் பரிசீலிக்கப்படலாம்

விண்ணப்பிக்கும் முறை – 3 படிகள்

1கட்டணம் செலுத்துதல்
விண்ணப்பப் படிவக் கட்டணம் ரூ. 1,000/-
2படிவத்தைப் பூர்த்தி செய்தல்
இணையவழி (பரிந்துரைக்கப்படுகிறது) அல்லது தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்தல்
3அஞ்சல் / நேரில் சமர்ப்பித்தல்
2026 நவம்பர் 30 அல்லது அதற்கு முன்

படி 1 – விண்ணப்பப் படிவக் கட்டணம் (ரூ. 1,000/-) செலுத்துதல்

கீழேயுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும்.

தெரிவு 1: Online கட்டணம்

Payee / Student Code: 42675036
Payment Code: 25604869
https://pay.jfn.ac.lk

தெரிவு 2: Online Bank Transfer

வங்கி: People’s Bank
கிளை: Jaffna University
கணக்கின் பெயர்: University of Jaffna
கணக்கு இல.: 162100310000891
Reference No.: 4267503625604869
Remarks / Reference பகுதியில் Reference No. கட்டாயம் உள்ளிடப்பட வேண்டும். வைப்புச்சீட்டின் பிரதியைப் பெறவும்.

தெரிவு 3: வங்கியில் நேரடியாகச் செலுத்துதல்

மக்கள் வங்கியின் ஏதாவதொரு கிளையில், வைப்புச்சீட்டின் (deposit slip) மூலம் பணம் செலுத்தவும்.
கணக்கு இல.: 162100310000891
Reference No.: 4267503625604869
Reference No. கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். வைப்புச்சீட்டின் பிரதியைப் பெறவும்.

கற்கைநெறிக் கட்டணம்: ரூ. 195,000/- (ரூ. 5,000/- மீள அளிக்கப்படும்). முழுமையாகவோ அல்லது மூன்று தவணைகளாகவோ செலுத்தலாம்.

படி 2 – விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தல்

பரிந்துரைக்கப்படுகிறது

💻 தெரிவு A: இணையவழி விண்ணப்பம்

  1. சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் கட்டண பற்றுச்சீட்டினை தெளிவான PDF ஸ்கேன் செய்யவும். (Certified True Copies)
  2. இணையவழிப் படிவத்தைத் திறந்து அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
  3. ஆவணங்களைப் பதிவேற்றிச் சமர்ப்பிக்கவும்.
  4. சமர்ப்பித்த பின் பூர்த்தி செய்த படிவத்தை அச்சிடவும்.
📝 இணையவழி விண்ணப்பத்தைத் திறக்க

📄 தெரிவு B: தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்தல்

  1. விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து அச்சிடவும்.
  2. தெளிவாகவும் வாசிக்கக்கூடியவாறும் பூர்த்தி செய்து, உறுதிமொழியில் கையொப்பமிடவும்.
  3. கட்டண பற்றுச்சீட்டு மற்றும் தேவையான இணைப்புகளை (annexures) இணைக்கவும் (Certified True Copies) .
📥 விண்ணப்பப் படிவம் (PDF) தரவிறக்கம்

படி 3 – விண்ணப்பத்தை அனுப்புதல்

எந்தத் தெரிவைப் பயன்படுத்தினாலும், அச்சிட்ட / பூர்த்தி செய்த படிவத்தை உரிய இணைப்புகளுடன் பதிவுத்தபால் மூலம் அல்லது நேரில் 2026 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பின்வரும் முகவரிக்குச் சமர்ப்பிக்கவும்:

சிரேஷ்ட உதவிப்பதிவாளர்
உயர் பட்டப்படிப்புக்கள் பீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பலாலி வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம், இலங்கை
✉ கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் குறிப்பிடவும்:
“தமிழில் முதுமாணி – அணி XI க்கான விண்ணப்பம்”

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இணையவழியில் விண்ணப்பித்தால் அஞ்சலில் அனுப்ப வேண்டுமா?

ஆம். வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பின் படிவத்தை அச்சிட்டு, உரிய இணைப்புகளுடன் (Certified True Copies) முடிவுத் திகதிக்கு முன்னர் சிரேஷ்ட உதவிப்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

இணையவழிப் படிவம் செயல்படவில்லை. என்ன செய்வது?

உதவிக்கு பட்டதாரிக் கற்கைகள் பீடத்தைத் தொடர்பு கொள்ளவும்; அல்லது தெரிவு B இல் படிவத்தைத் தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து முடிவுத் திகதிக்கு முன் அனுப்பவும்.

கற்கைநெறிக் கட்டணத்தைத் தவணைகளில் செலுத்தலாமா?

ஆம். முழுமையாகவோ அல்லது மூன்று தவணைகளாகவோ செலுத்தலாம். தொகை மற்றும் திகதிகளுக்குப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

விண்ணப்பதாரர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுவர்?

நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவர்.

⚠ உரிய முறையில் விண்ணப்பிக்காத, சரியாகப் பூரணப்படுத்தாத மற்றும் முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.