அணி VIII வவுனியா பிராந்திய நிலையம் (பகுதி நேரம்)
அனுமதிக்குரிய தகைமைகள்
பாடசாலைகளில் கடமையாற்றும் பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்தும் கல்வி நிர்வாகிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரிகள் 50 வயதுக்கு குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
தெரிவு முறைமை : எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் எழுத்துத் தேர்வு (பொது விவேகம், கல்வியியல் பொதுத் தகைமை) மற்றும் நேர்முகத் தேர்வு இரண்டினதும் பெறுபேறுகளுக்கமைய தெரிவுகள் இடம்பெறும்.
கற்கைக் காலம்: இரண்டு வருடங்கள்
மொழி மூலம் : தமிழ்
கற்கைநெறிக் கட்டணம் : 155,000/- (நூலக பாவணைக்கான கட்டணம் 5000/- மீள அளிக்கப்படும்)
விண்ணப்பப் படிவக் கட்டணம்: 1,000/-
விண்ணப்ப முடிவுத்திகதி : 27.12.2024
விண்ணப்பப் படிவம் பெறும் முறை:
1. மக்கள் வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணம் வைப்பிலிடும் வைப்புச்சீட்டில் (190082420001735) எனும் கணக்கு இலக்கத்திற்கு விண்ணப்பததிற்கான ரூபா
1000/- கட்டணத்தை செலுத்திய பின் வைப்புச்சீட்டை பட்டதாரிக் கற்கைகள் பீட அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பப் படிவங்களை நேரில்
பெறறுக்கொள்ளலாம்.
2.வலைத்தளம் மூலமாக தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனுப்புபவர்கள் நிதியாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் பெயருக்கு ரூபா 1000/- பெறுமதியான காசுக்கட்டளையை மக்கள் வங்கியில் மேற்குறிப்பிடப்பட்ட கணக்கிலக்கத்திற்கு (190082420001735) செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல்
விண்ணப்பங்களை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் கற்கைநெறியின் பெயரினைக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அல்லது நேரில் 29.11.2024 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு சிரேஷ்ட உதவிப்பதிவாளர், பட்டதாரிக் கற்கைகள் பீடம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு அனுப்புதல வேண்டும்.
உரிய விண்ணப்பப்படிவங்களில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள், சரியாக பூரணப்படுததாத விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்பமுடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பஙகள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய : Download